கொடைக்கானல் வந்தார் கவர்னர்
கொடைக்கானல் : கொடைக்கானல் தெரசா பல்கலையில் நடக்கும் 31 வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க தமிழக கவர்னர் ஆர்.என். ரவி நேற்றிரவு கொடைக்கானல் வந்தார்.தெரசா பல்கலையில் இன்று நடக்கும் பட்டமளிப்பு விழாவில் கவர்னர் ரவி தலைமை வகித்து மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குகிறார். உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி . செழியன், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலை பேராசிரியர் சாந்தி ஸ்ரீ துளிப்புடி பண்டிட் கலந்து கொள்கின்றனர். விழாவில் 397 பேருக்கு நேரடியாகவும், 6238 பேருக்கு பல்கலை மூலமாகவும், 16 பேருக்கு பதக்கம் என 6,635 பேருக்கு பட்டம் வழங்கப்பட உள்ளது.கொடை ரோடு: இதன் விழாவிற்காக விமானம் மூலமாக மதுரை வந்த கவர்னர் மதுரையிலிருந்து கொடைக்கானலுக்கு காரில் சென்றார். செல்லும் வழியில் கொடைரோடு விருந்தினர் மாளிகைக்கு வந்தார். அங்கு அவரை திண்டுக்கல் கலெக்டர் பூங்கொடி மலர் கொத்து கொடுத்து வரவேற்றார். சிறிது நேர ஓய்விற்குப் பிறகு கொடைக்கானல் புறப்பட்டு சென்றார்.