உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ரோடு சேதத்தால் மக்களிடம் தினமும் சாபத்தை வாங்கும் நெடுஞ்சாலை துறை

ரோடு சேதத்தால் மக்களிடம் தினமும் சாபத்தை வாங்கும் நெடுஞ்சாலை துறை

திண்டுக்கல்; திண்டுக்கல் திருச்சிரோடு மேம்பாலம் சர்வீஸ் ரோடுகள் முக்கிய ரோடாக உள்ளது .இதன் வழியே தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.பள்ளி ,கல்லுாரி செல்லும் மாணவர்கள் அதிகமாக இந்த ரோடுகளை பயன்படுத்துகின்றனர். மேம்பாலம் அமைத்த போது ஏற்படுத்தப்பட்ட இந்த ரோடு 13 ஆண்டுகள் கடந்தும் சீரமைக்கப்படாமல் மேடு பள்ளமாக காட்சி தருகிறது .தினமும் ஏராளமான வாகனங்கள் சென்றுவருவதால் மேலும் ரோடுகள் சேதமாகி வருகிறது .மழை காலம் என்றால் சொல்லவே வேண்டாம். இதன் பள்ளங்களில் மழை நீர் தேங்க வாகன ஓட்டிகள் பெரும் பாதிப்பை சந்திக்கின்றனர்.அவ்வப்போது விபத்துக்களையும் சந்திக்கின்றனர். இதை பராமரிக்க வேண்டிய நெடுஞ்சாலை துறை எதையும் கண்டுக்காது ஆழ்ந்த துாக்கத்தில் உள்ளது. தினமலர் நாளிதழில் செய்தி வரும் மறுநாள் ஏதோ கடமைக்காக ஆங்காங்கு மண்ணை போட்டு பள்ளங்களை மூடி செல்கின்றனர். இதன் பணி முடிந்த ஓரிரு நாளில் மீண்டும் பழைய நிலையே தொடர்கிறது . எம்.பி., எம்.எல்.ஏ., உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் எதையும் கண்டுக்காது வேடிக்கை பார்க்கின்றனர். ஆங்காங்கு காரணமின்றி போராட்டங்களை நடத்தும் அரசியல் கட்சியினரும் இதை கண்டுகொள்வதில்லை. இதன் காரணமாக அப்பாவி மக்கள்தான பாதிக்கின்றனர்.ரோடு சேதம் குறித்து நெடுஞ்சாலை அதிகாரிகளை தொடர்பு கொண்டால் புதியதாக ரோடு அமைக்க உள்ளதாக கூறுகிறார்களே தவிர அதன்பின் எதையும் கண்டுகொள்ளாமல் உள்ளனர். மாவட்ட நிர்வாகம்தான் இதன் மீது அக்கறை கொள்ள வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Bhaskaran
நவ 15, 2024 09:36

தேசிய நெடுஞ்சாலை பராமரிப்பிலும் ஊழல் தமிழனா கொக்கா


vee srikanth
நவ 14, 2024 18:15

எவ்வளவு சாபம் வாங்கினாலும் அவர்களுக்கு ஒன்றும் ஆகாது.


வைகுண்டேஸ்வரன்
நவ 14, 2024 16:47

இந்த சாலை ஒன்றிய அரசின் NHAI ஆணையத்தின் கீழே வருகிறது. அவர்கள் தான் சீரமைக்க வேண்டும். அதனால் தான், தி ம வாசகர்கள் இந்த பக்கமே வரலை.. ஹா ஹா ஹா ஹா


Sekar Times
நவ 14, 2024 11:29

எந்த சாபமானாலும் எத்தனை சாபமானாலும் எங்களை ஒன்றும் செய்யமுடியாது ஏனெனில் நாங்கள் சூடுசுரணை இல்லாத ஜென்மங்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை