உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வழித்தடம் இழந்த செங்குளம் ஓடை

வழித்தடம் இழந்த செங்குளம் ஓடை

வடமதுரை : வேலாயுதம்பாளையம் ஊராட்சி பண்ணமலை பகுதி மலைகளில் பெய்யும் மழை நீர் ஊற்றாக்கரை குளத்தில் சேரும். இக்குளம் நிரம்பி மறுகால் பாயும் நீரும், வழியிடை விளைநிலங்களில் சேகரமாகும் மழை நீருடன் சேர்ந்து சிற்றோடையாக மாறி மொட்டணம்பட்டி, நந்தவனப்பட்டி வழியே செங்குளத்துபட்டி அடுத்துள்ள செங்குளத்தை அடைகிறது. இவற்றில் வடமதுரை பேரூராட்சிக்குட்பட்ட பகுதி ஓடை ஆக்கிரமிப்பால் மறைந்து கிடக்கிறது. இதனால் ஓடையில் வரும் நீர் செங்குளத்திற்கு செல்லாமல் அருகிலுள்ள விளை நிலங்களில் புகுந்து வேறு திசைகளில் பிரிந்து செல்கிறது. ஓடை நீர் பாய்வதால் இப்பகுதியிலுள்ள பலருடைய விளை நிலங்கள் பாதிப்பிற்குள்ளாகிறது. ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்றி வழித்தடத்தை மீட்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !