உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / அரிவாளை காட்டி பெண்ணை கடத்தியவர் கைது

அரிவாளை காட்டி பெண்ணை கடத்தியவர் கைது

செந்துறை : -நத்தம் அருகே அரிவாளை காட்டி பெண்ணை கடத்தியவரை போலீசார் கைது செய்தனர் .-நத்தம் அருகே செந்துறை மணக்காட்டூர்-மேக்காடை சேர்ந்தவர் கண்ணன் 40. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 4 குழந்தைகளுக்கு தாயான 28 வயது பெண்ணுக்கும் தொடர்பு இருந்து வந்தது.குடும்பத்தாருக்கு தெரிய வர ஊர் முக்கியஸ்தர்கள் இருவரையும் கண்டித்துள்ளனர். அதன்படி அந்த பெண்ணும் கண்ணனிடம் பேசாமல் இருந்து வந்துள்ளார். ஆத்திரமடைந்த கண்ணன் அரிவாளை காட்டி மிரட்டி பெண்ணை கடத்தி சென்றார். தனிப்படை அமைக்கப்பட்டு புகார் கொடுத்த 3 மணி நேரத்தில், அலைபேசி சிக்னலை வைத்து கோடாங்கிகுட்டு மலை பகுதியில் பெண்ணுடன் பதுங்கி இருந்த கண்ணனை கைது செய்தனர். பெண்ணை மீட்டு அவரது கணவரிடம் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ