உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / செய்தி சில வரிகளில்...

செய்தி சில வரிகளில்...

நெகிழி ஒழிப்பு ஊர்வலம்வேடசந்துார்: பேரூராட்சி நிர்வாகம் சார்பில் நெகிழியை ஒழிப்போம், மஞ்சள் பையை மீட்டெடுப்போம், என் நகரத்தை துாய்மையாக வைத்திருப்பது எனது கடமை என்ற கோஷத்துடன், பள்ளி மாணவிகள் பங்கேற்ற ஊர்வலம் நடந்தது. பேரூராட்சி தலைவர் மேகலா தலைமை வகித்தார். செயல் அலுவலர் சகாய அந்தோணி யூஜின் முன்னிலை வகித்தார். கலெக்டர் நேர்முக உதவியாளர் முருகன், பேரூராட்சிகள் உதவி இயக்குனர் ராஜா, மாசு கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளர் குணசேகரன், தி.மு.க., நகர செயலாளர் கார்த்திகேயன், பேரூராட்சி துணைத் தலைவர் சாகுல் ஹமீது பங்கேற்றனர்.வாக்காளர் தின ஊர்வலம்திண்டுக்கல்: தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு உறுதி மொழியேற்பு கலெக்டர் பூங்கொடி தலைமையில் நடந்தது. போட்டிகளில் வென்ற மாணவர்,மகளிர் சுய உதவிக்குழுவினர்களுக்கு கலெக்டர் பரிசு வழங்கினார். டி.ஆர்.ஓ., சேக்முகையதீன் , அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். கலெக்டர் முகாம் அலுவலகத்திலிருந்து மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலம் துவங்கிய மாநகராட்சி அலுவலகத்தில் முடிந்தது. ஆர்.டி.ஓ., சக்திவேல் தொடங்கி வைத்தார். தியாகிகளுக்கு மரியாதைநத்தம்:பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானா முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட செயலாளர் தமிழ்முகம் தலைமை வகித்தார்.ஒன்றிய செயலாளர்கள் மயில்ராஜ், முத்துமாணிக்கம், நகர செயலாளர் ராமர், துணை செயலாளர் பூ முருகன் முன்னிலை வகித்தனர். தியாகிகளின் உருவப் படத்திற்கு மலர்துாவி மரியாதை செலுத்தபட்டது. கவுன்சிலர் இஸ்மாயில் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.ஏர்ஹாரன்கள் பறிமுதல்திண்டுக்கல்: திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. வட்டார போக்குவரத்து அலுவலர் கார்த்திக்கேயன் தலைமை வகித்தார். வாகன ஆய்வாளர் இளங்கோ, இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி கலந்து கொண்டனர். விதிகளை கடைபிடிக்க ஓட்டுநர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. அரசு,தனியார் என 20 பஸ்களில் இருந்த ஏர்ஹாரன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.விழிப்புணர்வு ஊர்வலம் எரியோடு: எரியோட்டில் பேரூராட்சி சார்பில் வாக்காளர் தின உறுதிமொழி எடுத்துக்கொண்ட பின்னர் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்பது குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தி துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது. தலைவர் முத்துலெட்சுமி தலைமை வகித்தார். செயல் அலுவலர் சையது அபுதாகிர் முன்னிலை வகித்தார். சில கடைகளில் இருந்து தடை பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்பட்டது. வார்டு சபா கூட்டம்சின்னாளபட்டி: பேரூராட்சி நிர்வாகம் சார்பில் 17வது வார்டு சபா கூட்டம் நடந்தது. தலைவர் பிரதீபா தலைமை வகித்தார். துப்புரவு ஆய்வாளர் கணேசன் முன்னிலை வகித்தார். வார்டு கவுன்சிலர் ரவிக்குமார் வரவேற்றார். தேசிய வாக்காளர் தின உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். சாயப்பட்டறை கழிவு நீரால் நிலத்தடி நீர் மாசுபடுதல், சோமசுந்தரம் காலனியில் செப்டிக் டேங்க் கழிவுகளால் தொற்று, கருணாநிதி காலனி சாக்கடையில் முட்புதர் குறித்து புகார் தெரிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை