மேலும் செய்திகள்
மண்பாண்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
4 hour(s) ago
தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் திண்டுக்கல் : பொங்கல் பண்டிகையின் போது குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா மண் பானை, மண் அடுப்பு வழங்க தமிழக அரசு உத்தரவிட வேண்டும். மழைக் கால நிவாரணத் தொகையை ரூ.5ஆயிரத்திலிருந்து ரூ.7ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மண்பாண்டத் தொழிலாளர்கள் குலாலர், அமைப்புச் சாரா தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கலெக்டர் அலுவலகம் முன் நடந்த இதற்கு மாவட்ட தலைவர் கோபால் தலைமை வகித்தார். எஸ்.ஐ.ஆர்., விழிப்புணர்வு ஊர்வலம் திண்டுக்கல் : வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. திண்டுக்கல் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் ஐ.டி.ஐ. மாணவர்கள் ,மகளிர் சுய உதவி குழு பெண்கள் என 200க்கு மேற்பட்டோர் கலந்து கொண்ட இதை கலெக்டர் சரவணன் தொடங்கி வைத்தார். திண்டுக்கல் தலைமை தபால் நிலையம், பஸ் ஸ்டாண்ட் வழியாக மணிக்கூண்டு சென்று மீண்டும் ஆர்.டி .ஓ., அலுவலகத்தில் முடிந்தது. நத்தம் : நத்தத்தில் தாசில்தார் ஆறுமுகம் தலைமை வகித்தார். பேரூராட்சி செயல் அலுவலர் விஜயநாத், தாசில்தார் சரவணன், வருவாய் ஆய்வாளர்கள் துர்காதேவி, வெள்ளையம்மாள், துப்புரவு ஆய்வாளர் செல்வி சித்ரா மேரி முன்னிலை வகித்தனர். வி.ஏ.ஓ., முத்து கலந்து கொண்டனர்.
4 hour(s) ago