உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / போலீசாரை கடுப்பேற்றிய கனிமத்துறை அதிகாரிகள்

போலீசாரை கடுப்பேற்றிய கனிமத்துறை அதிகாரிகள்

வடமதுரை : வடமதுரை அருகே போலீசார் பாதுகாப்புடன் மணல் திருட்டை பிடிக்க சென்ற கனிமவளத்துறை அதிகாரிகள், சிக்கிய வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் சென்றதால் போலீசார் அதிருப்தியடைந்தனர் .தென்னம்பட்டி வரட்டாறு பகுதி மணல் திருட்டினால் பாதிக்கப்பட்ட விவசாயி புகாரில் ஆய்வு நடத்த கனிம வளத்துறை உதவி இயக்குனர் விஜயராகவன், ஊழியர்கள் வந்தனர். வடமதுரை போலீசில் தகவல் தெரிவிக்க பாதுகாப்பிற்கு போலீசாரையும் அழைத்து சென்றனர். குறிப்பிட்ட பகுதிக்கு சென்றபோது மணல் திருட்டில் ஈடுபட்டிருந்த வாகனங்கள் அதிகாரிகளை ஒரு பொருட்டாக கருதாமல் மணல் அள்ளுவதில் மும்முரமாக இருந்தன . இதன் பின் சுதாரித்த அவர்கள் அங்கிருந்து வாகனங்களை எடுத்துகொண்டு தப்பினர். அதிகாரிகள் போலீசாார் துணையுடன் விரட்டி சென்று பிடித்தனர். பிடிப்பட்ட மணல் திருட்டு வாகனங்கள் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் அதிகாரிகள் திரும்பினர். கையும் களவுமாக சிக்கிய வாகனங்கள் மீது நடவடிக்கை ஏதும் இல்லாததால் அப்பகுதி விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர். பறிமுதல் நடவடிக்கை,கைது இருக்கும் என எதிர்பார்த்த போலீசாரும் கடுப்பான மன நிலையில் திரும்பினர். கனிம வளத்துறையினர் வடமதுரை போலீசில் புகார் ஏதும் தரவில்லை. இதன் காரணமாக போலீசார், விவசாயிகள் மட்டுமன்றி பொது மக்களும் கனிமவளத்துறை அதிகாரிகள் மீது அதிருப்தியில் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ