வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இரண்டு பேர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்கள். ஒருவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம், மற்றொருவருக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.20 ஆயிரம் அபராதம். அப்படியானால் செலபஸ் வேறு வேறாக இருக்குமோ?
திண்டுக்கல்:சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து போக்சோ வழக்கில் சிக்கிய ஊராட்சி துணைத்தலைவர், கல்லுாரி மாணவருக்கு சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.வேடசந்துார் சுக்காம்பட்டியை சேர்ந்த ஊராட்சி துணைத்தலைவர் சுப்பிரமணி 62. தி.மு.க., பிரமுகரான இவர் 2024 மார்ச்சில் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதன்வழக்கு திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடந்தது. இதில் சுப்பிரமணிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சரண் தீர்ப்பளித்தார்.*நிலக்கோட்டை மல்லனம்பட்டியை சேர்ந்த கல்லுாரி மாணவர் விக்னேஷ் குமார் 20. இவர் 2023ல் வத்தலக்குண்டு பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி கடத்தி பாலியல் தொல்லை கொடுத்தார். இதன்வழக்கு விசாரணை திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடந்தது.விக்னேஷ் குமாருக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சரண் தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் ஜோதி ஆஜரானார்.