உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / 1350 கிலோ ரேஷன் அரிசி கடத்தியவர் கைது

1350 கிலோ ரேஷன் அரிசி கடத்தியவர் கைது

திண்டுக்கல்:திண்டுக்கல் குடிமை பொருள் வழங்கல் குற்றப்பிரிவு எஸ்.ஐ.,ராதா தலைமையிலான போலீசார் கொட்டப்பட்டி பிரிவு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். வேகமாக சென்ற மினிலாரியை மடக்கி சோதனையிட்டனர். அதில் மூடைகளில் 1350 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரிந்தது. லாரியை ஓட்டி வந்தவரிடம் நடத்திய விசாரணையில் திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் ஜம்புளியம்பட்டி பகுதியை சேர்ந்த சக்திவேல் 36, என்பதும் மாட்டுத்தீவனத்திற்காக ரேஷன் அரிசியை விற்பனை செய்ததும் தெரிந்தது. போலீசார் இவரை கைது செய்து மினிலாரியுடன் அரிசியை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !