உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மழை நீர் தேங்குவதால் சகதியாகும் ரோடு

மழை நீர் தேங்குவதால் சகதியாகும் ரோடு

கழிவுநீரால் சுகாதாரக் கேடுதிண்டுக்கல் மேட்டுப்பட்டி சாக்கடையில் கழிவுநீர் தேங்கி சுகாதாரக் கேடு ஏற்படுகிறது.கொசுக்கள் உருவாக குழந்தைகள் உடல் நலம் பாதிக்கப்படுகின்றனர் .சாக்கடையை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்,கல்யாணி, திண்டுக்கல்................------------தேவை சோலார் விளக்குநத்தம் திண்டுக்கல் நெடுஞ்சாலை கோபால்பட்டியில் நெடுஞ்சாலை தடுப்பில் ஒளிரும் எச்சரிக்கை விளக்குகள் இல்லாததால் விபத்து அபாயம் உள்ளது. விபரீதங்களை தடுக்க சோலார் மின்விளக்குகள் அமைக்க வேண்டும். ரமேஷ், பாப்பம்பட்டி................-----------சகதியாக மாறும் ரோடுவடமதுரை கொசவபட்டியில் இருந்து எட்டிகுளத்துப்பட்டி செல்லும் ரோட்டில் மழைநீர் வெளியேற வழியின்றி ரோட்டில் தேங்குவதால் சகதியாக மாறி போக்குவரத்திற்கு சிரமத்தை தருகிறது. சீரமைப்பு பணி செய்ய வேண்டும். -- கிருஷ்ணன் வடமதுரை.....................------------மேடு பள்ளமான ரோடுதிண்டுக்கல் ரவுண்டு ரோட்டில் மேடு பள்ளமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் கீழே விழுகின்றனர். ஓரப்பகுதியில் ரோடு தாழ்வாக உள்ளதால் விபத்து நடக்கிறது .பள்ளம் உள்ள பகுதியை சமப்படுத்த வேண்டும்.தங்கராஜ், ரவுண்ட் ரோடு.....................------------ரோட்டில் சிதறும் குப்பைதிண்டுக்கல் மெங்கில்ஸ் ரோட்டில் குப்பை அள்ளப்படாமல் சிதறி கிடக்கிறது .இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது .பிளாஸ்டிக் கலந்த குப்பையில் கால்நடை மேய்கிறது . குப்பையை அகற்ற வேண்டும்.பாண்டி, திண்டுக்கல்.................------------சாய்ந்த பெயர் பலகைதிண்டுக்கல் கமலா நேரு மருத்துவமனை ரோடு பெயர் பலகை சாய்ந்த நிலையில் உள்ளது .இதனால் வாகன ஓட்டிகள் ரோடு பெயர் தெரியாமல் சுத்தி செல்கின்றனர். பெயர் பலகையை சரி செய்ய வேண்டும். பாலன், திண்டுக்கல்............------------சாக்கடை பாலம் சேதம்திண்டுக்கல் மேட்டுப்பட்டி செல்லும் கருவூலம் ரோட்டில் சாக்கடை பாலம் அருகே ரோடு சேதம் அடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகளுக்கு கீழே விழுகின்றனர். இதை சரி செய்ய வேண்டும்.பாக்கியராஜ், திண்டுக்கல்..............


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை