உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வாகனங்கள் செல்ல கூட தகுதியற்ற நிலையில் ரோடு

வாகனங்கள் செல்ல கூட தகுதியற்ற நிலையில் ரோடு

சாணார்பட்டி: சிலுவத்துார் ஊராட்சி பொம்மநாதபுரம் செல்லும் ரோடு ஜல்லிகற்கள் பெயர்ந்து சேதமடைந்துள்ளதால் வாகனங்கள் செல்ல தகுதியற்ற நிலையில் உள்ளது. சிலுவத்தூர் ஊராட்சியில் உள்ள பொம்மநாதபுரம் செல்லும் ரோடு ஜல்லிகற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக உள்ளது.சேதமடைந்து பல ஆண்டுகள் ஆனநிலையில் இன்னும் புதுப்பிக்காததால் இதில் பயணிக்கும் கிராம மக்கள் ,மருத்துவ தேவைகளுக்கும்,பள்ளி கல்லுாரி செல்ல மாணவர்களும் சிரமப்படுகின்றனர்.சாலை வசதி இல்லாத காரணத்தால் 5க்கு மேற்பட்ட உயிர் இழப்புகளும் நடந்துள்ளன. சிரமத்தை அனுபவிக்கிறார்கள் எஸ்.எம்.நிர்மல் விஜய், த.வெ.க., தெற்கு மாவட்ட செயலாளர், சாணார்பட்டி: பொம்மநாதபுரம் செல்லும் ரோடு சேதமடைந்து பல மாதங்களுக்கு மேலாகிறது.இதில் பயணிக்கும் கிராமமக்களும் பள்ளி மாணவர்களும் தினமும் சிரமத்தை அனுபவிக்கின்றனர். மக்களின் அடிப்படைத் தேவையான ரோடு வசதிகளை மேம்படுத்தி தர முன்வர வேண்டும். இதே போல் சாணார்பட்டி ஒன்றியத்தில் ஒவ்வொரு ஊராட்சிகளிலும் உள்ள கிராமங்களுக்கு செல்லும் ரோடுகள் மொட்டையாகவுண்டன்பட்டி, செடிப்பட்டி, கொழிஞ்சிபட்டி, கோம்பைப்பட்டி ஊராட்சியில் பாப்பம்பட்டி, கணவாய்ப்பட்டி ஊராட்சியில் கொரசின்னம்பட்டி உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லும் ரோடுகள் சேதமடைந்து மோசமான நிலையில் உள்ளது. இந்த ரோடுகளை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். வர மறுக்கும் ஆட்டோக்கள் என்.செல்வகுமார், சமூக ஆர்வலர், பொம்மநாதபுரம்: கிராமத்திற்கு செல்லும் ரோடு சேதம் அடைந்து பல ஆண்டுகள் ஆகிறது. ஏதேனும் மருத்துவ அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் கூட வேகமாக செல்ல முடியாத நிலையில் ரோடு உள்ளது. வாடகை ஆட்டோக்காரர்கள் கூட வர மறுக்கின்றனர். கூடுதலாக வாடகை கேட்கின்றனர். இந்த ரோட்டில் சென்றால் வாகனங்கள் சீக்கிரம் பழுதாகிறது. ரோடை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை