மேலும் செய்திகள்
போதையில் மோதல்; பாட்டில் குத்து
05-Oct-2024
வேடசந்தூர் : வேனை வாடகைக்கு எடுத்தவர் வாடகையும் தராமல் னேனையும் கொண்டு விடாமல் சினிமா காமெடியில் நடிகர் வடிவேலு பேசுவது போல் வண்டி விடும்போது வாடகை தருவதாக கூறி ஏமாற்றுவதாக போலீசில் பெண் புகாரளித்துள்ளார்.வேடசந்துாரை சேர்ந்தவர் சாந்தி 40. இவர் கடனுக்கு வேன் வாங்கி ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.500 வாடகை பேசி கொடுத்துள்ளார். சில நாள் வாடகை கொடுத்தவர் பிறகு வாடகை கொடுப்பதை நிறுத்திவிட்டார். அவரை தேடி சென்றும் முறையான பதில் இல்லை. பாதிக்கப்பட்ட பெண் வேடசந்துார் போலீசில் புகார் கொடுத்தார். விசாரணையில் வண்டியை வாடகைக்கு எடுத்தவர் சினிமா காமெடியில் நடிகர் வடிவேலு பேசுவது போல் வேறொரு நபரிடம் அடகு வைத்து விட்டதாகவும், வண்டியை விடும்போது வாடகை தருவதாக தெரிவித்துள்ளார். போலீசார் வேனை ஒப்படைக்கும்படி எச்சரித்து அனுப்பியும் வேனை கொடுக்க வில்லை. பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளிக்க மீண்டும் வேடசந்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
05-Oct-2024