உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / 700 கிலோ மக்காச்சோளம் திருட்டு

700 கிலோ மக்காச்சோளம் திருட்டு

வடமதுரை,: அரசு சமுதாயக்கூடத்தில் வைத்திருந்த 700 கிலோ மக்காச்சோளத்தை திருடியவர்களை போலீசார் தேடுகின்றனர்.செங்குறிச்சி பாண்டியனுாரை சேர்ந்தவர் விவசாயி இளையராஜா 35. தனது நிலத்தில் விளைந்த 19 மூடை மக்காச்சோளத்தை களத்தில் காயவைத்தார். மழை காரணமாக ஆலம்பட்டி நால்ரோடு அரசு சமுதாயக்கூடத்தில் வைத்திருந்தார். தீபாவளி பண்டிகை முடிந்ததும் விற்பனைக்காக கொண்டு செல்ல திட்டமிருந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு சமுதாய கூடத்தின் பூட்டை உடைத்த நபர்கள் உள்ளே இருந்த 700 கிலோ அளவிலான 11 மூடை மக்காச்சோளத்தை திருடி சென்றனர். வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை