உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / நெடுஞ்சாலை தடுப்புகளில் இல்லை எச்சரிக்கை விளக்குகள்-

நெடுஞ்சாலை தடுப்புகளில் இல்லை எச்சரிக்கை விளக்குகள்-

நத்தம்: நத்தம் - கோபால்பட்டி நெடுஞ்சாலை பயன்பாட்டிற்கு வந்து 2 ஆண்டுகளுக்கு மேலான நிலையில் ஒளிரும் மின் - விளக்குகள், சாலையில் ஒளிரும் சோலார் மின் விளக்குகள், ஒளிரும் பட்டைகள் அமைக்காதது என சாலை தடுப்புகளில் போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லாததால் தொடர் விபத்துக்கள் நடந்து வருகிறது.மாவட்டத்தை பொறுத்தவரையில் சாலை வசதி என்பது இன்றளவும் பல் வேறு கிராமங்களில் தன்னிறைவு பெறாத நிலையில் உள்ளது.குறிப்பாக நத்தம் பகுதி மலைக்கிராமங்களில் இன்று வரையும் மண்பாதையே உள்ளது. இதனிடையே திண்டுக்கல், நத்தம் என 2நகரங்களை இணைக்கும் வகையில் திண்டுக்கல்லில் இருந்து சாணார்பட்டி, கோபால்பட்டி, கணவாய்பட்டி வழியாக நத்தம் வரையில் நெடுஞ்சாலை உள்ளது.7 மீட்டர் அகலம் கொண்ட இந்த சாலை 10 மீட்டர் அகல சாலையாக மாற்றப்பட்டுள்ளது. பழநி பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் நடந்து செல்வதற்காக 4 அடி அகலத்தில் நடைபாதை அமைக்கப்பட்டது. சாலை தரமாக அமைக்காததால் லேசான மழைக்கு கூட தாக்குப்பிடிக்காது ஜல்லிக்கற்கள் பெயர்ந்து பள்ளம் மேடாக மாறிவருடுகிறது.சாலை பயன்பாட்டிற்கு வந்து 2 ஆண்டுகளுக்கு மேலான நிலையில் ஒளிரும் மின்விளக்குகள், சோலார் விளக்குகள், ஒளிரும் பட்டைகள் போன்றவை அமைக்காததாலும், சாலை தடுப்புகளில் போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லாததால் தொடர் விபத்துக்கள் நடந்து வருகிறது.இதை தடுக்கசாலையில் போதிய வசதிகளை ஏற்படுத்த நெஞ்சாலை துறை முன்வர வேண்டும்.

தொ டர் விபத்தால் பாதிப்பு

சி.பந்தளராஜா மணிகண்டன், பா.ஜ., சாணார்பட்டி ஒன்றிய தலைவர் வீரசின்ளம்பட்டி: நத்தம் இடையே விரிவுபடுத்தப்பட்ட சாலை செயல்பாட்டுக்கு வந்து ஓராண்டிலே சேதமடைந்து பள்ளம் மோடாக மாறி உள்ளது. பாதயாத்திரை பக்தர்களுக்காக போடப்பட்ட நடைபாதை பல இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் பேவர் பிளாக்கற்கள் சேதமடைந்துள்ளன. இதனை அதிகாரிகள் உடனே சீரமைக்க வேண்டும். சாலை சேதமடைந்த இடங்களில் முழுமையான சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளாமல் தென்னை ஓலை தட்டிகளை வைத்தும், இரும்பு தடுப்பை வைத்தும்பாதையை மறைத்துள்ளனர். இதனால் விபத்து அபாயம் உள்ளது. கன்னியாபுரம் சந்தான வர்த்தினி ஆற்றுப் பாலத்தில் சேதம் ஏற்பட்டுள்ளது. சாலை மிகவும் பள்ளமாகவும் உள்ளது. சாலையின் 2 பக்கமும் மேடு, நடுவில் தொட்டில் போன்ற அமைப்பில் இந்த சாலை உள்ளது. இதனால் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் தொடர்ந்து விபத்தில் சிக்குகின்றனர்.

பாதுகாப்பில் மந்த நிலை

பிரபாகரன், நாம் தமிழர் கட்சி நிர்வாகி, வீரசின்னம்பட்டி:நத்தம் மெய்யம்பட்டி, எர்ரமாநாயக்கன்பட்டி குறிப்பாக கோபால்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சாலை நடுவே தடுப்புகள் அமைக்கப்பட் டுள்ளது.ஆனால் இந்த தடுப்புகளில் ஒளிரும் பட்டைகள், சோலார் எச்சரிக்கை விளக்கு என எதுவும் அமைக்காமல் பாதுகாப்பானது மோசமான நிலையில் உள்ளது. கோபால்பட்டியில் சில மாதங்களாக பல்வேறு விபத்துக்கள் நடந்து பலர் காயம் அடைந்துள்ளனர்.சாலை தடுப்புகளில் முறையாக பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். நத்தம் -மதுரை இடையே 4 வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் - நத்தம் இடையேயும் 4 வழிச்சாலை அமைக்க வேண்டும். அப்படி செய்தால் திண்டுக்கல்லில் இருந்து மதுரை செல்பவர்கள் நத்தம் சாலையை பயன்படுத்துவார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ