வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இதைத்தானே எனது நண்பரும் விவசாயியான் சஞ்சீவி செய்து வருகிறார்
மாவட்டத்தில் மழை பெய்யும் அளவு நாளுக்கு நாள் குறைந்து கொண்டும் சில இடங்களில் அதிகரித்து கொண்டு உள்ளது. பருவமழை காலங்களில் முன்பைவிட பரவலாக மழை பெய்யாமல் ஏதாவது ஓரிரு இடங்களில் மொத்தமாக கொட்டி விடுகிறது.இதன் காரணமாக விவசாயிகளும் மழையை நம்பி உள்ளவர்களும் செய்வதறியாது தவிக்கின்றனர். மழை நீரை சேகரிப்பதற்கு முடியாமல் உள்ளனர். மழை பொழியும் இடங்கள், அளவு ஆகியவற்றை முன்கூட்டியே சொல்லும் வானிலை அறிக்கை தற்போது ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை சொல்லப்படுகிறது. மழை அளவு கணக்கீடு செய்யும் முறை மாவட்டத்தில் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே உள்ளது. இதனை அதிகரித்து வருவாய் கிராமங்கள் தோறும் வி.ஏ.ஓ., அலுவலகங்களில் மழை மானியைவைத்து மழை அளவினை கணக்கிட்டு வழங்கினால் விவசாயிகளுக்கும் மற்ற துறையினருக்கும் பயனுள்ளதாக இருக்கும். மழை அளவினை ஒப்பீடு செய்து கால சூழ்நிலைக்கு ஏற்ப விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் எச்சரிக்கை உதவிகளை செய்ய முடியும்.
இதைத்தானே எனது நண்பரும் விவசாயியான் சஞ்சீவி செய்து வருகிறார்