உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / உளுந்து வடையில் பூரான் சாப்பிட்டோருக்கு மயக்கம்

உளுந்து வடையில் பூரான் சாப்பிட்டோருக்கு மயக்கம்

திண்டுக்கல்:திண்டுக்கல், என்.ஜி.ஓ., காலனி பெரியார் காலனியை சேர்ந்தவர் பியூலா, 28. இவர் நேற்று காலை திருச்சி ரோடு உழவர் சந்தை பகுதியில் உள்ள டீக்கடை ஒன்றில் உளுந்து வடைகள் வாங்கினார். தொட்டு சாப்பிட சட்னியும் வாங்கி, அவற்றை வீட்டிற்கு எடுத்து வந்து மகன் சஞ்சீவ், 4, தோழி அஸ்வதி, 25, ஆகியோருடன் சாப்பிட்டார்.அப்போது ஒரு வடையின் உள்பகுதியில் இறந்த நிலையில் பூரான் இருந்தது. அந்த வடையை சாப்பிடாமல் அப்படியே வைத்து விட்டனர். வடையில் பூரான் இருந்ததை பார்த்ததும், வடை சாப்பிட்ட மூவருக்கும் சிறிது நேரத்தில் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.அவர்கள் உடனே, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். அங்கு, சிகிச்சைக்கு பின், சிறிது நேரத்தில் மூன்று பேரும் வீடு திரும்பினர். தகவலறிந்த, உணவு பாதுகாப்பு மாவட்ட அலுவலர் கலைவாணி மற்றும் அலுவலர்கள் அந்த டீ கடையில் ஆய்வு செய்தனர்.அங்கு சுத்தமில்லாத முறையில், உணவு பண்டங்கள் தயாரிக்கப்படுவதை அறிந்து, 3,000 ரூபாய் அபராதம் விதித்து, கடைக்கு சீல் வைத்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை