உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / திருப்பரங்குன்றத்திற்கு காவடி எடுத்து செல்ல முயன்றவர்கள் கைது

திருப்பரங்குன்றத்திற்கு காவடி எடுத்து செல்ல முயன்றவர்கள் கைது

பழநி: திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் திருப்பரங்குன்றம் போராட்டத்திற்கு செல்ல முயன்றவர்களை போலீசார் தடுத்தி நிறுத்தி கைது செய்தனர்.பழநி பா.ஜ., கட்சி அலுவலகத்தில் பூஜைகள் செய்த காவடிகளுடன் காலை 11:00 மணிக்கு திருப்பரங்குன்றத்திற்கு பா.ஜ., மகளிரணியினர் திண்டுக்கல் முன்னாள் மேற்கு மாவட்ட தலைவர் கனகராஜ் தலைமையில் புறப்பட்டனர். அரோகரா கோஷத்துடன் பாதயாத்திரையாக வந்த பா.ஜ.,வினரை டி.எஸ்.பி., தனஜெயன் தலைமையிலான போலீசார் தடுத்து கைது செய்தனர். நகரத் தலைவர் ஆனந்தகுமார், மாவட்ட பொதுச்செயலாளர் செந்தில் குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். இதேபோல் பா.ஜ., திண்டுக்கல் மேற்கு மாவட்ட தலைவர் ஜெயராமன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் குஜிலியம்பாறையிலிருந்து திருப்பரங்குன்றம் நோக்கி செல்ல புறப்பட்டனர். குஜிலியம்பாறை போலீசார் பா. ஜ., வினர் 17 பேரை கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.ஒட்டன்சத்திரம் பஸ் ஸ்டாண்ட் முன்பு ஆர்ப்பாட்டத்தில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட இளைஞர் அணி பொதுச் செயலாளர் சூர்யா தலைமை வகித்தார். விவசாய அணி மாவட்ட தலைவர் நாட்டுத்துரை, வர்த்தக அணி மாவட்ட தலைவர் வெங்கடேஷ், இளைஞர் அணி நகரத் தலைவர் மணிமாறன் ரெட்டியார்சத்திரம் ஒன்றிய செயலாளர் ஜெகதீஷ், மேற்கு ஒன்றிய செயலாளர் கருப்பையா, ஒட்டன்சத்திரம் நகர தலைவர் குமாரதாஸ், மாநில பொது குழு உறுப்பினர் சிவா, மாநில செயற்குழு உறுப்பினர் பழனிச்சாமி, ஒட்டன்சத்திரம் ஒன்றிய தலைவர் ரகுபதி கைது செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

S. Neelakanta Pillai
பிப் 11, 2025 06:56

இது தெளிவான சட்ட ஒழுங்கு பிரச்சனை. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது என்பது போலீசாரின் அடக்குமுறையில் இருந்தே தெரிய வருகிறது. மக்களின் நியாயமான பணிகளை செய்ய விடாமல் தடுப்பது அதிகார துஷ்பிரயோகம். அப்படிப்பட்ட துஷ்பிரயோகத்தை தனிமனிதன் செய்தாலும் அரசு நிர்வாகம் செய்தாலும் அது சட்டத்தை மீறிய செயல் எனவே சட்டம் ஒழுங்கு தமிழ்நாட்டில் அறவே இல்லை என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு


C.SRIRAM
பிப் 05, 2025 19:53

காவடி எடுக்க சென்றவர்களை கைது செய்ய துடிக்கும் அன்ன காவடிகள்


V வைகுண்டேஸ்வரன்
பிப் 05, 2025 15:31

தமிழ் நாட்டில் எப்படியாவது ஒரு மத கலவரம் உருவாக்க பாஜகவும் அவங்க ஆளுங்க ளும் தொடர்ந்து முயற்சி செய்கிறார்கள். ஆனால் தமிழ் மக்களின் ஒற்றுமை யைக் குலைக்க இந்த சங்கி கொத்தடிமைகளால் முடியாது.


angbu ganesh
பிப் 05, 2025 09:34

நேத்து சந்தன கூடு விழா நடைபெற்றது அதுக்கு எல்லாம் ஒன்னும் சொல்லல இந்த கேடு கெட்ட அரசாங்கம் உனக்கு வோட்டு போட்டு அசிங்கமும் போடணுமா ஒரு முதல்வர்ன்றவர் எல்லாரையும் சமமா நடத்தணும் அதிலும் அதிக வோட்டு இருக்கற எங்களுக்கு மரியாதை செய்ய வேணாம் இப்படி அவமான படுத்தாத ஆனா இன்னும் நாங்க திருந்த மாட்டோம் நீ எவ்ளோதான் சாணி கரைச்சு அடிச்சாலும்


VENKATASUBRAMANIAN
பிப் 05, 2025 08:11

இதே மக்கள் திமுகவுக்கு ஓட்டு போடுவார்கள். இதுதான் தமிழகத்தின் தலைவிதி. இனிமேலாவது திருந்தி திமுகவை ஒதுக்கி வைக்க வேண்டும். இந்த விசயத்தில் பாஜக இந்து முன்னணி தவிர அனைத்து கட்சிகளும் இஸ்லாமியர்களுக்கு ஆதரவு அளித்துள்ளனர். மக்களே புரிந்து கொள்ளுங்கள்.


Raj
பிப் 05, 2025 06:39

விடியல் ஆட்சி தொடர்ந்தால் இது போல அநியாயங்கள் தொடரும்.


சமீபத்திய செய்தி