சித்திரை திருவிழாவில் இன்று திருக்கல்யாணம்
பழநி: பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா திருக்கல்யாணம் இன்று நடக்கிறது.பழநி மேற்கு ரத வீதியில் உள்ள இக்கோயில் சித்திரைத் திருவிழா மே 2 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா நாட்களில் தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி ஊர்வலம் நடக்கிறது.இன்று மாலை 6:00 மணிக்கு சுவாமிக்கு திருக்கல்யாண உற்ஸவம் நடைபெறுகிறது. மே 10 காலை 7:31 மணிக்கு திருத்தேரோட்டம் நடக்கிறது.