மேலும் செய்திகள்
சுற்றுலா பயணிகள் வருகை குறைவு
17-Jan-2025
கொடைக்கானல்: கொடைக்கானலில் வார விடுமுறையடுத்து சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்தனர். சில நாட்களுக்கு முன் சாரல்மழை பெய்தது. தரை இறங்கிய மேகக்கூட்டம் என ரம்யமான சூழல் நிலவுகிறது. சில்லிடும் காற்றால் கடுங்குளிர் நிலவுகிறது. குளு, குளு நகரில் உள்ள பிரையன்ட் பூங்கா. ரோஜா பூங்கா, கோக்கர்ஸ்வாக் , வெள்ளி நீர்வீழ்ச்சி, மன்னவனுர் சூழல் சுற்றுலா மையம், வன சுற்றுலா தலங்களை பயணிகள் ரசித்தனர். ஏரிச்சாலையில் குதிரை, சைக்கிள் சவாரியும், ஏரியில் படகு சவாரி செய்தனர். மதியம் பனியின் தாக்கம் அதிகரித்து குளிர் அதிகரித்தது. குளிரை தாங்கும் ஆயத்த ஆடைகளை அணிந்து சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் நடமாடினர்.
17-Jan-2025