உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கொடையில் மலர்கண்காட்சி குடைபிடித்து ரசித்த பயணிகள்

கொடையில் மலர்கண்காட்சி குடைபிடித்து ரசித்த பயணிகள்

கொடைக்கானல்: கொடைக்கானலில் நடக்கும் மலர் கண்காட்சியை சாரல் மழைக்கு இடையே குடை பிடித்து சுற்றுலா பயணிகள் பார்வையிட்டனர்.கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் 62 வது மலர்கண்காட்சி, கோடை விழா நேற்று முன்தினம் தொடங்கியது.பழங்கள், காய்கறிகள் பூக்களால் ஆன 7 வகை உருவ அமைப்புகள்,மலர்ப்படுகையில் பூத்துள்ள லட்சக்கணக்கான மலர்களை சுற்றுலா பயணிகள் ரசித்தனர். காலை முதலே காற்றுடன் சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. குடை பிடித்தபடி பூங்காவை பயணிகள் பார்வையிட்டனர். 2024ல் மலர் கண்காட்சியின் முதல் நாளில் 6 ஆயிரத்து 126 பேர் பூங்காவிற்கு வருகை தந்தனர். இதில் ரூ. 4 லட்சத்து 35 ஆயிரத்து 10 வருவாய் கிடைத்தது. தற்போதைய மலர் கண்காட்சியின் முதல் நாளில் 9515 பேர் பார்வையிட்டனர். இதில் ரூ. 6 லட்சத்து 38 ஆயிரத்து 505 வருவாய் ஈட்டியது குறிப்பிடத்தக்கது. மலர் கண்காட்சி மற்றும் கோடை விழா ஜூன் 1 வரை நடக்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ