உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கொடை யில் குவிந்த சுற்றுலா பயணிகள்

கொடை யில் குவிந்த சுற்றுலா பயணிகள்

கொடைக்கானல் : ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் விதமாக கொடைக்கானலில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.சர்வதேச சுற்றுலாத்தலமாக உள்ள கொடைக்கானலில் ஆங்கில புத்தாண்டைவரவேற்கும் விதமாக விடுதிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் கொடைக்கானலில் சாரலுடன் மிதமான மழை பெய்து வருகிறது.நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு சாரல் பெய்தது. இதிலும் பிரையன்ட் பூங்கா, ரோஜா பூங்கா, வெள்ளி நீர்வீழ்ச்சி, கோக்கர்ஸ்வாக், மன்னவனுார் சூழல் சுற்றுலா மையம், வனச் சுற்றுலா தலங்கள் உள்ளிட்ட பகுதிகளை கண்டு ரசித்தனர். ஏரியில் படகுசவாரி, ஏரிச்சலையில் குதிரை, சைக்கிள் சவாரி செய்து மகிழ்ந்தனர். காலை முதலே நகரில் தரை இறங்கிய மேக கூட்டம், பனிமூட்டத்தால் வாகனங்கள் முகப்பு விளக்கை எரிய விட்டு சென்றன. ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் விதமாக சுற்றுலா பயணிகள் நகர் முழுதும் குதுாகலமாக காணப்பட்டனர்.மாலை 6:00 மணிக்கு பின் ஏரிச்சலையில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் செய்ய போலீசார் தடைவிதித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை