உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  கொடை யில் சுற்றுலா பயணிகள்

 கொடை யில் சுற்றுலா பயணிகள்

கொடைக்கானல்: கொடைக்கானலில் வார விடுமுறையில் சுற்றுலாப் பயணிகள் முகாமிட்டனர். கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரி உள்ளிட்ட வெளி மாநில பயணிகள் வருகை அதிகமாக இருந்தது. பிரையன்ட், ரோஜா, செட்டியார் பூங்காக்கள், மன்னவனூர் சூழல் சுற்றுலா மையம், கோக்கர்ஸ்வாக், வெள்ளி நீர்வீழ்ச்சி உள்ளிட்ட பகுதிகளை பயணிகள் ரசித்தனர். ஏரியில் குதிரை, சைக்கிள் சவாரியும், ஏரியில் படகு சவாரி செய்து பயணிகள் மகிழ்ந்தனர். மதியத்திற்கு பின் பனியின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. காற்றில் ஈரப்பதம் அதிகரித்து குளிர் நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ