உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  பாலம் சேதத்தால் போக்குவரத்து பாதிப்பு

 பாலம் சேதத்தால் போக்குவரத்து பாதிப்பு

வேடசந்துார்: பாலப்பட்டி ஊராட்சி விராலிப்பட்டி பட்டியல் இன மக்கள் வசிக்கும் பகுதியில் 100 க்கு மேற்பட்ட வீடுகள் உள்ளன. அழகாபுரி கோவிலுார் ரோட்டில் இருந்து ஊருக்குள் ரோடு பிரிந்து செல்கிறது. இந்த ரோடு பிரியும் இடத்தில் 4 ஆண்டுகளுக்கு முன்பு பாலம் கட்டப்பட்டது. தற்போது பாலம் உடைந்து பெரிய அளவிலான ஓட்டையாக மாறிவிட்டது. இதனால் டூவீலரில் செல்வோர் , நடந்து செல்வோர் பாதிக்கப்படுவர் என்பதால் அப்பகுதி மக்கள் இடிந்த பாலத்தின் மீது கருவேல முட்களை வைத்து மூடி உள்ளனர். இதனால் இந்த வழியாக பள்ளி, நுாற்பாலை வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் பாலத்தை புதுப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை