சர்வீஸ் ரோட்டில் தேங்கும் தண்ணீரால் போக்குவரத்துக்கு இடையூறு
சாய்ந்து கிடக்கும் அறிவிப்பு பலகைவடமதுரை காணப்பாடி ரோட்டில் கலைமகள் துவக்கப் பள்ளி அருகில் இருக்கும் எச்சரிக்கை அறிவிப்பு பலகை சாய்ந்து கிடக்கிறது. இதை சீரமைக்க நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். -- சவுந்தரராஜன், வடமதுரை...............---------பெயர் பலகையில் போஸ்டர்திண்டுக்கல் அருகே சிறுமலை ரோட்டில் நெடுஞ்சாலைத்துறை பெயர் பலகையில் போஸ்டர் ஒட்டி மறைத்துள்ளனர் .இதனால் பெயர்கள் தெரியாமல் வாகன ஓட்டிக்கள் பாதிக்கின்றனர் . போஸ்டரை ஒட்டுவதை தடுக்க வேண்டும். ராமன் , சிறுமலை.............---------சேதமடைந்த சிலாப்திண்டுக்கல் கலெக்டர் அலுவலக கட்டத்தில் ஜன்னல் சிலாப் பகுதி சேதமடைந்துள்ளது .இதனால் கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வருவோர் அச்சத்துடன் வந்து செல்கின்றனர். இதை சீரமைக்க வேண்டும்.ஜெயக்குமார், திண்டுக்கல்...............----------சர்வீஸ் ரோட்டில் தண்ணீர் தேக்கம்நத்தம் பாலப்பநாயக்கன்பட்டி பிரிவில் தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் ரோட்டில் தண்ணீர் தேங்கி உள்ளதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. தண்ணீர் தேங்காமல் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாட்ஷா, நத்தம்............-----------சேதமான குடிநீர் தொட்டிகுஜிலியம்பாறை அருகே ஆலம்பாடி ஊராட்சி மலவாடிநாயக்கனுார் குடிநீர் மேல்நிலைத் தொட்டி துாண் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. கம்பிகளும் வெளியே தெரிகிறது .விபத்து ஏற்படும் முன் சரி செய்ய வேண்டும் வரதராஜ், குஜிலியம்பாறை...........-----------சாக்கடையில் கழிவுநீர்அய்யலுார் -எரியோடு ரோடு அருகே சாக்கடையில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது .தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது . பாதாசாரிகள் நடந்து செல்ல சிரமப்படுகின்றனர். இதை சீரமைக்க வேண்டும். முத்துக்குமார், எரியோடு..............------------கண்மாய் அருகே குப்பைவேடசந்துார் -கரூர் ரோடு ரங்கமலை கண்மாய் அருகே சாக்கு மூடைகளில் கழிவு பொருட்களை கொட்டி செல்கின்றனர். இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் இந்தப் பகுதியே குப்பை காடாக காட்சி அளிக்கிறது . இல.சக்திவேல், வேடசந்துார்.....------------