பயிற்சி முகாம்
ஆத்தூர்: ஆத்தூர் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள், மேற்பார்வையாளர்களுக்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பயிற்சி முகாம் செம்பட்டியில் நடந்தது. தாசில்தார் முத்து முருகன் தலைமை வகித்தார். இதில் வாக்காளர் பட்டியல் திருத்தம், புதிய வாக்காளர்கள் சேர்ப்பு, முகவரி மாற்றம் தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இப்பணிக்காக முறையாக வீடு வீடாக நேரில் சென்று, சரியான தகவல்களை சேகரித்து பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டது. தொகுதிக்கு உட்பட்ட ஓட்டு சாவடி நிலை அலுவலர்கள், மேற்பார்வையாளர்கள் பங்கேற்றனர்.