உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  மரம் வளர்ப்பால் உருவாகும் வேடந்தாங்கல்

 மரம் வளர்ப்பால் உருவாகும் வேடந்தாங்கல்

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் பறவைகளுக்குத் தேவையான நீர் நிலை, அதற்கான உணவு, கூடு கட்டி வாழ்வதற்கான அடர்ந்த மரங்கள் நிறைந்திருக்கும். அதேபோல்தான் வேடசந்தூர் பகுதியிலும் ஒரு வேடந்தாங்கலாய் மரங்கள் நிறைந்த பகுதியாக ஓர் தனியார் நூற்பாலை செயல்பட்டு வருகிறது. வேடசந்தூர் - திண்டுக்கல் கரூர் ரோட்டில் விருதலைப்பட்டி அருகே அமைந்துள்ளது ஈஸ்ட்மேன் தனியார் நூற்பாலை. 25 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த நூற்பாலையில், கட்டடங்கள், அலுவலகங்கள் தவிர எஞ்சியுள்ள அனைத்து இடங்களிலும் ஆயிரக்கணக்கான மரங்களை நட்டு வைத்து தண்ணீர் விட்டு, அதற்கென்று ஆட்களை நியமித்து பராமரித்து வருகின்றனர். மெயின் ரோட்டில் சென்றாலே ரோட்டோரம் மட்டுமின்றி, உள் பகுதியிலும் அடர்ந்த தோப்பாக மரங்கள் காட்சியளிக்கின்றன. வேம்பு, புங்கை, நவா உள்ளிட்ட பல்வேறு வகையிலான மரங்கள் அடர்த்தியாக தோப்பாக கண்ணுக்கு குளிர்ச்சியாக காட்சியளிக்கின்றன. இந்த நூற்பாலைப் பகுதியில், மாலை நேரங்களில் ஆயிரக்கணக்கான பறவைகள், குறிப்பாக காகங்கள், மைனா, கொக்குகள், குருவிகள், கிளிகள், மயில்கள் கூட்டம் கூட்டமாக வந்து சேர்கின்றன. அவைகளுக்கு தேவையான உணவும், நீரும் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. மேலும், ஊழியர்களால் மரங்கள் வளர்க்கப்படும் பணி தொடர்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை