உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / விளையாட்டு வீரர்களுக்கு டி.வி.ராமசுப்பையர் நினைவு விருது

விளையாட்டு வீரர்களுக்கு டி.வி.ராமசுப்பையர் நினைவு விருது

திண்டுக்கல்; திண்டுக்கல் வி.ஜி.,கல்வி அறக்கட்டளை, கலை சங்கமம் சார்பில் மாவட்ட அளவில் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு டி.வி., ராமசுப்பையர் நினைவு விருது வழங்கும் விழா தனியார் பயிலரங்கத்தில் நேற்று நடந்தது. முன்னாள் கால்பந்து வீரர் ராஜேந்திரன் தலைமை வகித்து பேசி விளையாட்டு வீரர்களுக்கு விருதுகள், சான்றிதழ்கள் வழங்கினார். வி.ஜி.,கல்வி அறக்கட்டளை செயலாளர் ஞானகுரு, வள்ளி நாயகி அறக்கட்டளை செயலாளர் ஆனந்த், சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற மாவட்டத்தலைவர் நாகுசாமி, முத்தழகுப்பட்டி நோவா அமலநாதன், மாவட்ட அ.தி.மு.க., இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலாளர் சிவபாரதி, ஹாக்கி விளையாட்டு வீரர்கள் நல்வாழ்வு சங்க உதவி செயலாளர் சேசுராஜ், கலை சங்கமம் தலைவர் ராஜகோபால் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். இதில், மாணவர்கள் யோகசனம், சிலம்பம், கராத்தே செய்து தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை