உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / டிரைவர், கண்டக்டரை தாக்கிய இருவர் கைது

டிரைவர், கண்டக்டரை தாக்கிய இருவர் கைது

பட்டிவீரன்பட்டி: சங்காரெட்டிகோட்டையை சேர்ந்தவர்கள் செல்லப்பாண்டி 40, வினோத்குமார் 24. இருவரும் ஈரோட்டில் இருந்து கம்பம் செல்லும் அரசு பஸ்சில் பயணம் செய்தனர். ஈரோட்டை சேர்ந்த சாம்கமலேசன் 51, ஓட்டினார். கண்டக்டராக அதே ஊரை சேர்ந்த பாபு 56, இருந்தார்.பஸ் சேவுகம்பட்டி சுங்கச்சாவடியில் நின்ற போது செல்லப்பாண்டி, வினோத்குமார் இருவரும் பஸ் பின் இருக்கையில் இருந்த ஜவுளி பார்சல்களிலிருந்து இரண்டு பைகளில் ஜவுளிகளை எடுத்தனர். கண்டக்டர் பாபு தடுத்தார். இருவரும் சேர்ந்து டிரைவர், கண்டக்டர் இருவரையும் தாக்கி மிரட்டல் விடுத்தனர். பட்டிவீரன்பட்டி போலீசார் செல்லப்பாண்டி, வினோத்குமாரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை