உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சந்தனக்கட்டை கடத்திய இருவர் கைது

சந்தனக்கட்டை கடத்திய இருவர் கைது

கன்னிவாடி : தருமத்துப்பட்டி அருகே சந்தனக்கட்டை கடத்திய இருவரை வனத்துறையினர் கைது செய்தனர்.கன்னிவாடி வனத்துறை ரேஞ்சர் ஆறுமுகம் தலைமையிலான குழுவினர் தருமத்துப்பட்டி பீட் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். பஸ் ஸ்டாப்பில் நின்ற இருவரிடம் சோதனை நடத்தியதில் 5 கிலோ எடை சந்தன கட்டைகள் இருந்ததை கண்டனர். தும்மலப்பட்டியை சேர்ந்த மாயாண்டி மனைவி சாந்தம்மாள் 70, தருமத்துப்பட்டி சுரக்காபட்டியை சேர்ந்த கருப்பையா 50, என்பது தெரிய இவர்களை கைது செய்தனர். சந்தன கட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ