உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / டூவீலர்கள் மோதலில் இருவர் பலி

டூவீலர்கள் மோதலில் இருவர் பலி

திண்டுக்கல்:திண்டுக்கல்மாவட்டம் விளாம்பட்டி அருகே மட்டப்பாறையை சேர்ந்தவர் கவுதமன் 48. ஆத்துப்பட்டியை சேர்ந்தவர் ஜெகன் 47. இருவரும் டாஸ்மாக் சூப்பர்வைசர்களாக பணிசெய்தனர்.இவர்கள் டூவீலரில் (ஹெல்மெட் அணியவில்லை) செட்டியபட்டி அருகே திருச்சி நான்கு வழிச்சாலையில் நேற்று முன்தினம் இரவு 7:30 மணிக்கு சென்றனர். பின்னால் மூணான்டிபட்டியைச் சேர்ந்த கவுதம் ஓட்டி வந்த டூவீலர் , இவர்கள் டூவீலரில் மோதியதில் மூவரும் காயமடைந்தனர்.திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கவுதமன் , ஜெகன் இறந்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி