கொலையில் மேலும் இருவர் கைது
வடமதுரை: வடமதுரை அருகே தாமரைப்பாடி அரசு மதுக்கடை பாரில் ஏற்பட்ட தகராறில் கூலித்தொழிலாளி கொல்லப்பட்ட வழக்கில் மேலும் இருவர் கைதாகினர். தாமரைப்பாடி ராஜிவ் காந்தி நகர் கட்டட தொழிலாளி முருகன் 45. நவ.2 இரவு தாமரைப்பாடி டாஸ்மாக் கடை பாரில் மது குடிக்க சென்ற நிலையில் டி.என்.பாறைப்பட்டி பிரேம்குமார் 33, அவரது நண்பர்களுடன் ஏற்பட்ட தகராறில் கொல்லப்பட்டார். கல்லாத்துப்பட்டி கிறிஸ்ட் ஆண்ட்ரூஸ் 26, பாபா என்ற கரண் ஜேம்ஸ்ராஜ் 25, கைதான நிலையில், பிரேம்குமார், முள்ளிப்பாடி செட்டியபட்டி காளிராஜ் 21, ஆகியோரையும் வடமதுரை போலீசார் கைது செய்தனர்.