உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கொடையில் இரு பெண்கள் தற்கொலை

கொடையில் இரு பெண்கள் தற்கொலை

கொடைக்கானல்: - கொடைக்கானல் மலைப்பகுதியை சேர்ந்த இளம் பெண்கள் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து ஆர்.டி.ஓ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கொடைக்கானல் மூங்கில்காட்டை சேர்ந்தவர் முத்துவீரக்குமார் இவரது மனைவி அனிதா 23, இவர்களுக்குள் அடிக்கடி குடும்பத்தில் தகராறு ஏற்பட்ட நிலையில் அனிதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.கொடைக்கானல் பெர்னியல் ரோட்டை சேர்ந்தவர் மணிகண்டன் இவரது மனைவி இந்திரா 22, திருமணமாகி இரு ஆண்டாகிறது. குடிபோதையில் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இதனால் தற்கொலை செய்துகொண்டார். இரு பெண்களின் இறப்பு குறித்து சந்தேகம் எழுந்த நிலையில் கொடைக்கானல் ஆர்.டி.ஓ., திருநாவுக்கரசு விசாரணை செய்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை