உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ரூ.205 கோடியில் பாதாள சாக்கடை; 24 வார்டுகளில் அமையுது

ரூ.205 கோடியில் பாதாள சாக்கடை; 24 வார்டுகளில் அமையுது

திண்டுக்கல் : திண்டுக்கல் மாநகராட்சியில் பாதாள சாக்கடை இல்லாத 24 வார்டுகளில் ரூ.205 கோடியில் பாதாள சாக்கடை அமைக்கும் பணி விரைவில் தொடங்க உள்ளது.திண்டுக்கல் மாநகராட்சியில் 48 வார்டுகள் 50 ஆயிரம் குடியிருப்புகளில் 2.25 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். 24 வார்டுகளில் ஏற்கனவே பாதாளசாக்கடை திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இதனால் இங்கு மட்டும் மழை நேரங்களில் கழிவுநீர் ரோட்டில் செல்லாமல் சாக்கடையில் செல்கிறது. மீதமுள்ள 24 வார்டுகளிலும் பாதாள சாக்கடை இல்லாததால் மழை நேரங்களில் ரோடுகளில் தண்ணீர் தேங்கி , கழிவுநீர் குடியிருப்புகளுக்குள் புகுந்து மக்களை பாடாய்படுத்தியது. இதை தொடர்ந்து 24 வார்டுகளில் பாதாள சாக்கடை அமைக்க உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதற்கு தேவையான திட்ட மதிப்பீட்டை தயார் செய்து உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை சமர்ப்பித்தனர். இதையடுத்து பாதாள சாக்கடை இல்லாத 24 வார்டுகளில் பாதாள சாக்கடை அமைக்க அரசு தரப்பில் ரூ.205 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதுன் பணி விரைவில் தொடங்க உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை