எழுச்சி நாள் விழா
வடமதுரை : தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் சார்பில் 2018 நவம்பர் 30ல் அரசாணை பெற்ற நாள் ஊராட்சி செயலாளர் எழுச்சி தின விழாவாக கொண்டாடப்படுகிறது. வடமதுரை ஒன்றிய அலுவலகத்தில் நடந்த விழாவில் சங்க கொடியை வட்ட கிளை தலைவர் மோகன்தாஸ் ஏற்றினார். மாநில துணைத் தலைவர் பரமேஸ்வரன், செயற்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணி, வட்டக் கிளை அவைத் தலைவர் வெள்ளைச்சாமி, மாவட்ட இணைசெயலாளர் கோவிந்தசாமி பங்கேற்றனர்.