உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வைகை இலக்கிய திருவிழா  ஆலோசனை

வைகை இலக்கிய திருவிழா  ஆலோசனை

திண்டுக்கல்: வைகை இலக்கியத் திருவிழா திண்டுக்கல்லில் நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் பூங்கொடி தலைமையில் நடந்தது. அப்போது கலெக்டர் கூறியதாவது: வைகைத் இலக்கியத்திருவிழாவினை முன்னிட்டு இளைஞர் இலக்கியத் திருவிழா கல்லுாரிகளில் பேச்சு, கட்டுரை, ஓவியம் உள்ளிட்ட 10 வகையான போட்டிகள் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.கலை நிகழ்ச்சிகள், புத்தகக்கண்காட்சி, போட்டிகளில் வெற்றி பெற்றவர்களின் ஓவியக்கண்காட்சி, பள்ளி, கல்லுாரி மாணவர்களின் புகைப்படக் கண்காட்சி, இலக்கிய சொற்பொழிவுகள், கலந்துரையாடல், கவிதை பொழிவு, புகழ்பெற்ற எழுத்தாளர்களின் கதை, கட்டுரை, நுால் திறனாய்வு, பரிசு வழங்குதல் இடம்பெற உள்ளன என்றார். டி.ஆர்.ஓ., சேக் முகையதீன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் கோட்டைக்குமார், ஆர்.டி.ஓ., சக்திவேல், மாவட்டநுாலக அலுவலர் சரவணக்குமார் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி