மேலும் செய்திகள்
காளியம்மன் கோயில் மண்டல பூஜை
26-Oct-2025
செந்துறை: -செந்துறை அருகே சிரங்காட்டுபட்டி வலசுப்பட்டி அன்பில் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதையொட்டி கோயில் வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு கணபதி ஹோமம், லெட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், பூர்ணாகுதி தீபாராதனை, முதல் கால யாகசாலை பூஜைகள் நடந்தது. இரண்டாம் கால யாகசாலை பூஜைகளை தொடர்ந்து பல்வேறு புனித ஸ்தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட தீர்த்தகுடங்கள் மேளதாளம் முழங்க ஊர்வலமாக கோபுர உச்சிக்கு எடுத்து செல்லப்பட்டது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மேளதாள இசையுடன் புனித நீர் கலசத்தில் ஊற்ற வானத்தில் கருடன் வட்டமடிக்க கும்பாபிஷேகம் நடந்தது. மூலவர் அன்பில் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து தரிசனம் செய்தனர்.அன்னதானம் வழங்கப்பட்டது.
26-Oct-2025