மேலும் செய்திகள்
கம்பியால் தாக்கிய விடுதி ஊழியர் கைது
02-Jan-2025
திண்டுக்கல்:திண்டுக்கல், மடத்து தெரு கிழக்கு மீனாட்சி நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் வி.சி., கட்சி முகாம் உறுப்பினர் அகரமுத்துகுமார், 32. இவர், இப்பகுதியில் நடந்த பொங்கல் நிகழ்ச்சியில் டிரைவர் அங்குசாமி, 32, என்பவரின் குழந்தையை பங்கேற்கக் கூடாது எனக்கூறி, தகராறில் ஈடுபட்டார். அகரமுத்துகுமார், அங்குசாமி இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அங்குசாமி, அவரது உறவினர் ஷியாம், 19, இருவரும் அகரமுத்துகுமாரிடம் தகராறு செய்தனர். அப்போது இருவரும் சேர்ந்து அகரமுத்துகுமார், அவரது அண்ணண் ஜெய்கணேசை கத்தியால் குத்தினர். இதில், அகர முத்துகுமார் இறந்தார். ஜெய்கணேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
02-Jan-2025