உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஊர் கோயிலை கையகப்படுத்த அறநிலையத்துறை முயற்சி போராட்டத்தில் குதித்த கிராம மக்கள்

ஊர் கோயிலை கையகப்படுத்த அறநிலையத்துறை முயற்சி போராட்டத்தில் குதித்த கிராம மக்கள்

திண்டுக்கல்: பல ஆண்டுகளாக ஊர் கட்டுப்பாட்டில் இருக்கும் கோயிலை ஹிந்து அறநிலையத்துறை தன் கட்டுப்பாட்டில் எடுக்க முயற்சிப்பதாக கூறி, திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சிறுகுடியை சேர்ந்த கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.நத்தம் சிறுகுடியை சேர்ந்த கிராம மக்கள் நுாற்றுக்கணக்கானோர் நேற்று திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் திரண்டனர். நுழைவு வாயில் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் கூறியதாவது:சிறுகுடி மந்தையில் ஸ்ரீ மந்தை முத்தாலம்மன் கோயில் உள்ளது. பொதுமக்கள் கொடுக்கும் வரி, நன்கொடையால் இக்கோயிலின் பூஜைகள் விழாக்கள் நடத்தப்படுகிறது. கோயிலுக்கு என நிலங்கள் எதுவும் கிடையாது.கோயில் நிர்வாகத்திற்காக சிறுகுடி ஸ்ரீ மந்தை முத்தாலம்மன் டிரஸ்ட் தொடங்கப்பட்டு பதிவும் செய்யப்பட்டுள்ளது.தற்போது ஆகம விதிப்படி பாலாலயம் செய்து கற்கோவிலாக கட்டும் திருப்பணிகள் நடந்து வருகின்றன. சிலர் ஹிந்து அறநிலையத்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்து திருப்பணி வேலைக்கு தடை ஏற்படுத்தி உள்ளனர்.அறநிலையத்துறை கோயிலை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர நடவடிக்கை எடுக்க உள்ளதாக தகவல் வந்துள்ளது.அறநிலையத்துறையின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பை தெரிவித்து வருகிறோம் என்றனர்.மனு அளிக்க ஊர் மக்கள் சிலர் கலெக்டரை பார்க்க சென்ற நிலையில், மற்றவர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை