உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பாலாறு பொருந்தலாறு அணை கரையோர மக்களுக்கு எச்சரிக்கை மழையால் நிரம்பி வரும் பாசன குளங்கள்

பாலாறு பொருந்தலாறு அணை கரையோர மக்களுக்கு எச்சரிக்கை மழையால் நிரம்பி வரும் பாசன குளங்கள்

பாலசமுத்திரம்,: பழநி பகுதியில் தொடர் மழையால், வரதமாநதி , குதிரையாறு அணை நிரம்பி உள்ள நிலையில் பாலாறு-பொருந்தலாறு அணையில் முதற் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.பழநி சுற்றுப்பகுதிகளில் பெய்து வரும் மழையால் பழநி பகுதியில் உள்ளவரதமாநதி அணை, குதிரையாறு அணை நிறைந்த நிலையில் மாவட்டத்தில் பெரிய அணையான பாலாறு-பொருந்தலாறு அணை நேற்று மதியம் 3:00 மணிக்கு 60.11 (65 அடி) அடியாக உயர்ந்துள்ளது. இங்கு வினாடிக்கு 218 கனஅடி நீர் வரத்து உள்ள நிலையில் இந்தஅணையிலிருந்து சண்முக நதியில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது . இதனால் சண்முக நதி கரையோர பகுதி பொது மக்களுக்கு பொதுப்பணித்துறை சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மழையால் பழநி சுற்றுப்பகுதிகளில் உள்ள அனைத்து குளங்களிலும் 80 சதவீதத்துக்கு மேல் தண்ணீர் நிரம்பியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை