உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / காந்தி கிராமத்தில் வீணான காவிரி குடிநீர்

காந்தி கிராமத்தில் வீணான காவிரி குடிநீர்

சின்னாளபட்டி: காந்திகிராமம், அம்பாத்துறை, தொப்பம்பட்டி உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் தண்ணீர் வினியோகம் நடக்கிறது. திண்டுக்கல் -மதுரை நான்கு வழி சாலை பகுதியில் இதற்கான குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான ஊராட்சிகள் சார்பில் பணம் செலவிடப்படுகிறது. இருப்பினும் இதற்கான வினியோக குழாய்களை பராமரிப்பதில் குடிநீர் வடிகால் வாரியம், உள்ளாட்சி அமைப்புகள் அலட்சியமாக உள்ளன. காந்திகிராமம் அருகே நேற்று பகலில் ஏற்பட்ட குழாய் உடைப்பு தொடர்பாக இப்பகுதியினர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். வெகு நேரமாகியும் சீரமைப்பிற்கான பணியாளர்கள் வராத சூழலில் அதிக தண்ணீர் வீணாக ரோட்டில் பெருக்கெடுத்தது. விலைக்கு வாங்கும் தண்ணீர் வீணானதால் சம்பந்தப்பட்ட ஊராட்சி பகுதிகளில் விநியோக சுழற்சி முறையில் பாதிப்பு ஏற்படுவதற்கான அபாயம் உருவாகியுள்ளது. ரோட்டில் சென்ற பாதசாரிகள், வாகன ஓட்டிகளும் அவதிக்குள்ளாகினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி