மேற்கு வங்க கவர்னர் பழநியில் தரிசனம்
பழநி: பழநி முருகன் கோயிலுக்கு மேற்கு வங்க கவர்னர் சி.வி.ஆனந்தபோஸ் குடும்பத்துடன் வந்தார். அரசு மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. ரோப் கார் மூலம் சென்ற அவர் சுவாமி தரிசனம், பின்னர் போகர் சன்னதியில் தரிசித்தார். ரோப் கார் மூலம் கிரி வீதி வந்து பின் மதுரை சென்றார்.