மேலும் செய்திகள்
வெண்டை, சுரை விலை குறைவு
11-Oct-2026
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் சுரைக்காய் விலை இரு மடங்காக உயர்ந்து கிலோ ரூ.6க்கு விற்பனையானது. ஒட்டன்சத்திரம், அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் சுரைக்காய் அதிகமாக விளைவிக்கப்படுகிறது. மார்க்கெட்டுக்கு வரத்து அதிகமாக இருந்ததால் கடந்த 10 நாட்களுக்கு முன்பு கிலோ சுரைக்காய் ரூ.3க்கு மட்டுமே விற்பனையானது. இந்நிலையில் மழை காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டதால் மார்க்கெட்டுக்கு வரத்தும் குறைந்தது. இதனால் விலை அதிகரித்து கிலோ ரூ.6க்கு விற்பனையானது. வியாபாரி ஒருவர் கூறுகையில், ‘மார்க்கெட்டுக்கு சுரைக்காய் வரத்து குறைவாக உள்ளதால் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது’ என்றார்.
11-Oct-2026