உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஏன் இந்த அலட்சியம்: பயன் இல்லாது வீணாகும் அரசு கட்டடங்கள்

ஏன் இந்த அலட்சியம்: பயன் இல்லாது வீணாகும் அரசு கட்டடங்கள்

மாவட்டத்தை பொறுத்தமட்டில் பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட பிற அரசுத்துறை சார்ந்த ஏராளமான அலுவலகம் , குடியிருப்பு கட்டடங்கள் பயன்பாடின்றி வெறுமனே உள்ளது.இவை பராமரிக்கப்படாததால் புதர்மண்டி சமூக விரோதிகள் கூடாரமாக உருமாறி உள்ளது.துவக்கத்தில் பயன்பாட்டில் இருந்த இவ்வகை கட்டடங்கள் தற்போது புதிய கட்டடங்கள் கட்டமைக்கப்பட்டதால் இவை அப்படியே விடப்பட்டு சிதிலமடைந்துள்ளன. இதில் பெரும்பகுதியும் அரசு சார்ந்த மாணவ விடுதிகள் அதிகம் எனலாம்.அதே நேரத்தில் ஏராளமான இடங்களில் அரசுத் துறை சார்ந்த அலுவலகங்கள் தனியார் இடங்களில் வாடகையில் செயல்படும் சூழல் உள்ளது. இவ்வாறான நிலையில் பராமரிப்பற்ற கட்டடங்களை சீரமைத்து அவற்றை அலுவலகங்கள் இல்லாத அரசு துறைகள் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் பராமரிப்பற்ற கட்டடங்களில் ஆய்வு செய்து அவற்றை புனரமைப்பு செய்து அரசுத்துறை சார்ந்த பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கையை எடுக்கும் பட்சத்தில் இது போன்ற கட்டடங்கள் உயிர்ப்பு பெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை