மேலும் செய்திகள்
காட்டு பன்றிகளை விரட்ட வனத்துறைக்கு கோரிக்கை
01-Dec-2024
தாண்டிக்குடி:திண்டுக்கல் மாவட்டம் தடியன்குடிசை - கே.சி.பட்டி ரோட்டில் முகாமிட்டுள்ள காட்டு யானைகள் வாகனங்களை மறிப்பதால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர்.இம்மாவட்டத்தில் ஆடலுார், பன்றிமலை, குப்பம்மாள்பட்டி, கே.சி.பட்டி, தாண்டிக்குடி, காமனூர், பெரியூரில் காட்டு யானைகள் சில மாதங்களாக முகாமிட்டு விளைபயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. தொடர்ந்து அவ்வழியாக ரோட்டில் செல்லும் வாகன ஓட்டிகளை அச்சுறுத்துகின்றன.நேற்று முன்தினம் இரவு தடியன்குடிசை கே.சி.பட்டி ரோட்டில் மூன்று யானைகள் முகாமிட்டு அவ்வழியாக சென்ற வாகனங்களை வழிமறித்து அச்சுறுத்தின. தொடர்ந்து விவசாய நிலங்களில் உள்ள மலைவாழையை துவம்சம் செய்தன. பந்தல் காய்கறிகள், காபி, மிளகு, ஏலக்காய் உள்ளிட்ட பயிர்களும் அவற்றிடமிருந்து தப்பவில்லை.வனத்துறையினர் பெயரளவிற்கு ரோந்து பணியை மேற்கொண்டுள்ளனர். இதனால் யானைகள் இப்பகுதியில் தொடர்ந்து போக்கு காட்டி வருகின்றன. நாள்தோறும் விவசாய பயிர் சேதத்தை கணக்கிட்டு இழப்பீடு குறித்து விவரத்தை சேகரிக்கும் பணியை செய்து வரும் வனத்துறையினர், யானைகளை அடர் வனப்பகுதியில் விரட்டும் நடவடிக்கையில் ஆர்வம் காட்டவில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டினர்.
01-Dec-2024