உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மின்தடை குழப்பங்களை தவிர்க்க உஷாராகுமா மின்வாரியம்

மின்தடை குழப்பங்களை தவிர்க்க உஷாராகுமா மின்வாரியம்

வடமதுரை: சட்டசபை கூட்டத்தொடர் ஜன.6ல் துவங்குவதால் பராமரிப்பு மின்தடை அறிவிப்புகள் விஷயத்தில் முன்கூட்டிய திட்டமிடலுடன் மின்வாரியம் செயல்பட வேண்டும்.மின் நிலையங்களில் மாதந்தோறும் நடக்கும் பராமரிப்பு பணிக்காக ஒரு நாள் பகலில் மின் சப்ளையை நிறுத்துவது வழக்கம். இதற்காக முன்கூட்டியே தேதி முடிவு செய்யப்படுகிறது. ஆனால் சட்டசபை நடக்கும் நாட்களில் மின்தடை செய்வதை தவிர்ப்பது நீண்ட ஆண்டுகளாக அதிகாரப்பூர்வமற்ற வகை செயல்பாடாக மின் வாரியத்தில் உள்ளது.சட்டசபை கூட்டம் டிச.9,10 ல் நடந்த நிலையில் அந்த தேதிகளில் பராமரிப்பு பணி மின்தடையை பல ஊர்களில் மின்வாரியம் வெளியிட்டது. இதை கருதி அன்று பல தொழிலகங்கள் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளித்தனர்.ஆனால் சட்டசபை கூட்டத்தால் மின்தடையை ரத்து செய்து வழக்கம் போல்மின்சப்ளை வழங்கியது. தொழிலாளர்களுக்கு விடுமுறை அளித்திருந்ததால் தொழில்நிறுவனங்கள் செயல்படாது உற்பத்தி பாதித்தது. தற்போது ஜன.6 ல் துவங்கி சில நாட்கள் சட்டசபை கூட்டம் நடப்பதால் மின்தடை அறிவிப்பு விஷயத்தில் குழப்பம் இல்லாமல் திட்டமிடலுடன் மின்வாரியம் செயல்பட வேண்டும் என தொழில் நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை