உள்ளூர் செய்திகள்

கம்பி வேலி சேதம்

குஜிலியம்பாறை : தெற்கு தெருவை சேர்ந்தவர் ஆசைத்தம்பி 53. இவருக்கு சொந்தமான நிலம் எஸ்.புதுார் அருகில் உள்ளது. மதுரை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் தாசில்தார், போலீசார், வி.ஏ.ஓ., சர்வேயர் முன்னிலையில் நிலத்தை அளந்து கல் ஊன்றி கம்பி வேலி போட்டு உள்ளார். ஆனால் கம்பி வேலி பிடுங்கப்பட்டு சுற்றுப்பகுதி மக்கள் மாடு, கன்று மேய்த்து கொண்டிருந்தனர். அதே பகுதியை சேர்ந்த வெள்ளைச்சாமி, கருப்பசாமி, லட்சுமி, பாக்கியம், ராணி, பழனியம்மாள் ஆகிய 6 பேர் மீது குஜிலியம்பாறை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !