உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / திருமணமான 3 மாதத்தில் பெண் தற்கொலை பழநி ஆர்.டி.ஓ., விசாரணை

திருமணமான 3 மாதத்தில் பெண் தற்கொலை பழநி ஆர்.டி.ஓ., விசாரணை

அம்பிளிக்கை : ஒட்டன்சத்திரம் அருகே திருமணமான மூன்றே மாதத்தில் பெண் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து ஆர்.டி.ஒ., விசாரணை நடக்கிறது. திருவாரூர் மன்னார்குடி பகுதியைச் சேர்ந்த சங்கரும், அதேபகுதியை சேர்ந்த உறவினர் மகள் கார்த்திகாவும் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில், ஒட்டன்சத்திரம் சின்ன கரட்டுப்பட்டி பகுதியில் உள்ள தனியார் குவாரியில் சங்கர் டிரைவராக பணியாற்றி வருகிறார். அதே பகுதியில் உள்ள பேக்கரியில் கார்த்திகா கேசியராக பணியாற்றினார். நேற்று காலையில் கார்த்திகா வீட்டுக்குள் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருமணமாகி 3 மாதத்தில் பெண் தற்கொலை செய்து கொண்டதால் பழநி ஆர்.டி.ஒ., கண்ணன் மற்றும் அம்பிளிக்கை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி