உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பெண் கொலை; குற்றவாளியை பிடிக்க முடியாமல் திணறும்  போலீஸ்

பெண் கொலை; குற்றவாளியை பிடிக்க முடியாமல் திணறும்  போலீஸ்

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் பெண் கொலை வழக்கில் குற்றவாளிகளை கண்டறிமுடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். திண்டுக்கல் நாகல்நகர் ஆர்.எம்.டி.சி., டிப்போ-1 அருகே செப்.24ல், அரை நிர்வாணமாக பெண் தலையில் கல்லை துாக்கிப்போட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் இருந்தார். நகர் வடக்கு போலீசார் விசாரணை நடத்தியதில் இறந்தவர் பெயர் வள்ளி என்பதும், அவரின் உடமைகளை சோதனை செய்ததில், பிரவுன் கலந்த கருப்பு கலரில் பூ டிசைன் சேலை, ரோஸ் கலர் மேலாடை, சிவப்பு நிற பாவாடை இருந்தது. அருகே ரத்தக்கறையுடன் கிடந்த பெரிய கல் பறிமுதல் செய்யப் பட்டது. இந்நிலையில், அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி., கேமராக்களை கைப்பற்றி ஆய்வு செய்ததில் சந்தேக நபர்களின் நடமாட்டத்தை கண்காணித்த போலீசார் அவர்களை பிடிக்கும் முயற்சியில் இறங்கினர். ஆனால் எந்த தடயமும் சிக்காததால் பெண் கொலையில் குற்றவாளியை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி