குடகனாற்றில் அழுகிய நிலையில் பெண் உடல்
வேடசந்துார்: குடகனாறு ஆற்றங்கரை ஓரம் 20 வயது இளம் பெண் உடல் அழுகிய நிலையில் கிடந்தது. பெண் கொலை செய்யப்பட்டாரா என போலீசார் விசாரிக்கின்றனர். வேடசந்துார் விட்டல்நாயக்கன்பட்டி அருகே ஆத்துப்பட்டி குடகனாற்றின் கரையோர புதரில் 20 வயது இளம் பெண் அழுகிய நிலையில் இறந்து கிடந்தார். வேடசந்துார் எஸ்.ஐ., பாலசுப்பிரமணியன் தலைமையிலான போலீசார் பெண்ணின் உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர். போலீசார் கூறுகையில்,' இளம்பெண்களை காணவில்லை என எந்த புகாரும் இல்லை. வெளியூர் பெண்ணாக இருக்கலாம். இறந்தது யார் என விசாரிக்கிறோம்' என்றனர்.