வாசகர்கள் கருத்துகள் ( 2 )
வாழ்க டாஸ்மாக் , வளர்க தமிழா
எல்லாப் புகழும் அப்பாவின் டாஸ்மாக்குகே.
மேலும் செய்திகள்
வாலிபர் அடித்துக்கொலை நண்பர்கள் 3 பேர் கைது
21-Aug-2025
திண்டுக்கல்:திண்டுக்கல் அருகே மதுபோதையில் தாயை தரக்குறைவாக பேசியதால் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த நண்பர்கள் இருவர் செங்கல் சூளை தொழிலாளி தலையை துண்டித்து கொலை செய்தனர் . இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர். திண்டுக்கல் மைக்கேல்பட்டியை சேர்ந்த செங்கல் சூளை தொழிலாளி சிவக்குமார் 38. வக்கம்பட்டியில் ஆள் நடமாட்டம் இல்லாத தோப்பு பகுதியில் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். எஸ்.பி.,பிரதீப், தாலுகா இன்ஸ்பெக்டர் பாலமுருகன், எஸ்.ஐ., அங்குசாமி விசாரித்தனர். தலை , உடலை கைப்பற்றிய போலீசார் உடலை பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.விசாரணையில், கொலை நடந்த தோட்டப்பகுதியில் சிவக்குமார் நண்பர்களான பழைய வக்கம்பட்டியை சேர்ந்த டிரைவர் கோபிக்கண்ணன் 38, பெயின்டர் சூரியா 19 , உடன் மது குடித்துள்ளார். அப்போது சிவக்குமார் ,கோபிக்கண்ணன் தாயை பற்றி தரக்குறைவாக பேசியதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த நண்பர்கள் இருவரும் சிவக்குமாரின் தலைய துண்டித்து கொலை செய்தது தெரியவந்தது.இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
வாழ்க டாஸ்மாக் , வளர்க தமிழா
எல்லாப் புகழும் அப்பாவின் டாஸ்மாக்குகே.
21-Aug-2025